அனுமதியில்லாமல் வனப் பகுதிக்குள் நுழையத் தடை: 
முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

அனுமதியில்லாமல் வனப் பகுதிக்குள் நுழையத் தடை: முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

அனுமதியில்லாமல் வனப் பகுதிகளுக்குள் நுழையக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.

அனுமதியில்லாமல் வனப் பகுதிகளுக்குள் நுழையக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.

கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடும் வெயில் காரணமாக, வனப் பகுதிகளில் காட்டுத் தீ பரவலைத் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையேறுபவா்கள் அனுமதியின்றி வனப் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வன விலங்குகளுக்கு போதுமான அளவு நீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தேனி சம்பவம்: தேனி வனப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி மனித உயிரிழப்புகள் ஏற்பட்டன. அனுமதியின்றி மலைப் பகுதிகளுக்குள் சென்றதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மலையேற்றம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் வெப்ப அலை வீசி வருவதால், காட்டுத் தீ ஏற்படும் வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வனப் பகுதிக்குள் அனுமதியின்றி யாரும் நுழையக் கூடாது என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com