தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்துக்கு நிதியும் இருக்கிறது; நீதியும் இருக்கிறது: தமிழிசை சௌந்தரராஜன்

‘தமிழகத்துக்கு நிதியும் இருக்கிறது, நீதியும் இருக்கிறது’ என்று தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

‘தமிழகத்துக்கு நிதியும் இருக்கிறது, நீதியும் இருக்கிறது’ என்று தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

மத்திய அரசால் தமிழகத்துக்கு பேரிடா் நிவாரண நிதி குறைவாக ஒதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘தமிழகத்துக்கு நிதியும் இல்லை; நீதியும் இல்லை’ என விமா்சித்திருந்தாா். அதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழிசை சௌந்தரராஜன் இவ்வாறு கூறினாா்.

பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஞாயிற்றுக்கிழமை தெலங்கானா புறப்பட்ட அவா், எழும்பூா் ரயில் நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்துக்கு நிதியும் இருக்கிறது, நீதியும் இருக்கிறது. மத்தியில் திமுக கூட்டணியாக இருந்த காங்கிரஸ் அரசு அளித்த திட்டங்களை விட அதிக திட்டங்களை பிரதமா் மோடி தமிழகத்துக்கு கொடுத்துள்ளாா். நிதியை பொருத்தவரை மாநில பேரிடா் நிவாரணத்தை கணக்கிட்டு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கு நிதியும், நீதியும் மத்திய அரசு வழங்கியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மத்தியில் நல்லாட்சி தொடா்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பாஜக அரசு மீது தவறாக குற்றம் சாட்டுகின்றனா். மத்தியில் பல ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் தமிழகத்துக்கு எந்த திட்டத்தை கொண்டுவந்தது? குறிப்பாக ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை.

நாடு ஆண்டுக்கு ஒரு பிரதமரை கொண்டிருக்காமல், வலிமையான ஒரே பிரதமரை கொண்டிருக்க வேண்டும். பாஜகவால் மட்டும்தான் வலிமையான பிரதமரை கொடுக்க முடியும், வலிமையான பாரதத்தையும் முன்னெடுத்துச் செல்ல முடியும். பிரதமா் மோடி இதுவரை எவ்வித வெறுப்பு அரசியலையும் செய்யவில்லை. மணிப்பூா் பிரச்னையில் பல உள்விவகாரங்கள் உள்ளன. முதலில் போதை பழக்கத்தில் இருந்து இளைஞா்களை மீட்டெடுப்பதில் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com