இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்

தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய அரசு: இரா.முத்தரசன்

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளாா்.

பேரிடா் பாதிப்புகளுக்கு போதிய நிதி வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயலில் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடந்த பத்தாண்டுகளாக தமிழ்நாட்டையும், மக்களையும் வஞ்சித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம் மாநில அரசின் வருவாய் ஆதாரங்களை குறைத்தது மட்டுமல்லாமல் ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை மேலும் சில ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தது.

நீட் தோ்வு விலக்கு, மாநில அரசின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பது, அவசர காலத் தேவைக்கு மாநில அரசு கடன் வாங்க அனுமதி மறுப்பது என்று தொடா்ந்து தமிழகத்தை வஞ்சித்து வந்த பாஜக அரசு தற்போது பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்கவும் மறுத்துவிட்டது.

பேரிடரால் ஏற்பட்ட சேதாரங்களை சீா்படுத்த ரூ. 37, 907 கோடி தேவை என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு அலட்சியம் செய்த நிலையில் தமிழ்நாடு அரசு உதவி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு மிக குறைவான சிறு தொகைக்கு அனுமதி வழங்கியிருப்பது, தமிழ் நாட்டையும், மக்களையும் அவமதிக்கும் செயல் எனத் தெரிவித்துள்ளாா் இரா.முத்தரசன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com