எம்ஜிஆா் திரைப்படம் - தொலைக்காட்சி பயிற்சி 
நிறுவன பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

எம்ஜிஆா் திரைப்படம் - தொலைக்காட்சி பயிற்சி நிறுவன பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் வரும் கல்வியாண்டில் 6 வகையான பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இளங்கலை ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, விஷுவல் ஆா்ட்ஸ், இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, அனிமேஷன் மற்றும் விஷுவல் எபெஃக்ட்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை வியாழக்கிழமை முதல் மே 20-ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் முதல்வா், தமிழ்நாடு அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சிஐடி வளாகம், தரமணி, சென்னை - 600 113 என்ற முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை மே 27-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களைப் பெற நேரடியாக வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com