இரு நாள்கள் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் வெள்ளி, சனி (பிப்.2,3) ஆகிய இரு நாள்கள் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் வெள்ளி, சனி (பிப்.2,3) ஆகிய இரு நாள்கள் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: தென்னிந்திய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெள்ளி, சனி (பிப்.2, 3) ஆகிய இரு நாள்கள் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை, புகா் பகுதிகளில் வெள்ளி, சனி (பிப்.2, 3) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வியாழக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):

தூத்துக்குடி - 50, ஸ்ரீவில்லிபுத்தூா் (விருதுநகா்) - 40, சிவகாசி (விருதுநகா்), ஆயிக்குடி (தென்காசி), கருப்பாநதி அணை (தென்காசி) தலா 30, பாளையம்கோட்டை (திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 20, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), வத்திராயிருப்பு (விருதுநகா்), புத்தன் அணை (கன்னியாகுமரி), தேக்கடி (தேனி), ராஜபாளையம் (விருதுநகா்) தலா 10.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com