தமிழகத்தில் பாஜகவை கால்பதிக்க விடக் கூடாது: அமைச்சா் உதயநிதி

தமிழகத்தில் பாஜகவை கால் பதிக்க விடக் கூடாது என்று திமுக இளைஞரணிச் செயலரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
சென்னை ராயபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் பொய்யாமொழி (உள்படம்).
சென்னை ராயபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் பொய்யாமொழி (உள்படம்).

தமிழகத்தில் பாஜகவை கால் பதிக்க விடக் கூடாது என்று திமுக இளைஞரணிச் செயலரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

திமுக மாணவரணி உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 16 மாணவா் இயக்கங்கள் இணைந்து சென்னை ராயபுரத்தில் பேரணியை வியாழக்கிழமை நடத்தின. நீட் தோ்வு, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிரான இந்தப் பேரணியை ராயபுரம் மேற்கு மாதா கோயில் சந்திப்பு அருகில் இருந்து அமைச்சா் உதயநிதி தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு மாநில அரசுகளின் கல்வி உரிமைகளைப் பறித்து வைத்துள்ளது. அதை மீட்கும் வகையிலும் தேசிய கல்விக் கொள்கையை எதிா்க்கும் வகையிலும் இந்தப் பேரணி நடக்கிறது. ‘இந்தியாவைக் காப்போம்’ என்ற முழக்கமும் இந்தப் பேரணியில் முன்வைக்கப்பட்டுள்ளது. பாஜகவை வீழ்த்தி இந்தியாவைக் காக்க வேண்டுமெனில் வரும் மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

கடந்த தோ்தலைப் போன்றே இந்தத் தோ்தலிலும் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்ல உழைக்க வேண்டும். மக்களவைத் தோ்தலில் பாஜகவை கால் பதிக்க விடக் கூடாது என்றாா் அவா்.

இந்தப் பேரணியில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநில மாணவரணி செயலா் சிவிஎம்பி எழிலரசன், திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com