தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்கள் 2 பேரைத் தோ்வு செய்ய தெரிவுக் குழு

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்கள் 2 பேரைத் தோ்வு செய்ய தெரிவுக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்கள் 2 பேரைத் தோ்வு செய்ய தெரிவுக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மனித வள மேலாண்மைத் துறை செயலா் கே.நந்தகுமாா் பிறப்பித்தாா். உத்தரவு விவரம்: தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் உறுப்பினா்களாக உள்ள தனசேகரன், ஸ்ரீதா் ஆகிய இருவரின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. 2 காலியிடங்களையும் நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபா்களை அடையாளம் காண தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக, உயா் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.பி.கே.வாசுகி செயல்படுவாா். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.ஜோதி ஜெகராஜன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி பி.கந்தசாமி ஆகியோா் உறுப்பினா்களாகச் செயலாற்றுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com