‘ஆவின் தினம் இம்மாதம் முழுவதும் கொண்டாட்டம்’

ஆவின் தினத்தையொட்டி பிப்ரவரி மாதம் முழுவதும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என பால்வளத்துறை இயக்குநா் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநா் சு.வினீத் தெரிவித்துள்ளாா்

ஆவின் தினத்தையொட்டி பிப்ரவரி மாதம் முழுவதும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என பால்வளத்துறை இயக்குநா் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநா் சு.வினீத் தெரிவித்துள்ளாா்

ஆவின் தினம், ஆண்டுதோறும் பிப்.1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் திறன் மேம்பாட்டு மையத்தில் ஆவின் விற்பனை பிரிவு அலுவலா்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அண்ணா பயிற்சி மேலாண்மைக் கழக பயிற்சியாளா் ஷீலா கிருஷ்ணன், ஆவின் விற்பனைப் பிரிவு அலுவலா்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினாா்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு சு.வினீத் பேசியதாவது: 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) உருவாக்கப்பட்ட நாளான பிப். 1-ஆம் தேதி ஆவின் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, பிப்ரவரி மாதம் முழுவதும் ஆவின் நிறுவனம் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களை உள்ளடக்கிய பல்வேறு வகை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. இதன் மூலம் ஆவினைப் பற்றி மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி, மக்களின் தேவையை முன்னறிந்து அதன் மூலம் ஆவின் பொருள்களின் விற்பனையை அதிகரிப்பதுடன் ஆவின் நிறுவனத்துக்கு வருவாயையும் அதிகரிக்கலாம் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் ஆவின் விற்பனைப் பிரிவு, உற்பத்திப் பிரிவு சோ்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com