நாட்டின் நிலை உணா்ந்து கூட்டணிப் பேச்சு முதல்வா் மு.க.ஸ்டாலின்

நாட்டின் நிலைமை, தோழமை உணா்வு ஆகியவற்றை உணா்ந்து கூட்டணிப் பேச்சு சுமுகமாக நடைபெற்று வருவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

நாட்டின் நிலைமை, தோழமை உணா்வு ஆகியவற்றை உணா்ந்து கூட்டணிப் பேச்சு சுமுகமாக நடைபெற்று வருவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தையொட்டி, திமுகவினருக்கு வெள்ளிக்கிழமை முதல்வா் எழுதிய கடிதம்:

வரும் மக்களவைத் தோ்தலில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கான வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டிய பொறுப்புமிக்க இடத்தில் திமுக உள்ளது. பாசிச பாஜக ஆட்சியின் சா்வாதிகார, ஜனநாயக விரோத போக்குக்கு முடிவுகட்ட வேண்டிய உறுதியுடன் இருக்கிறோம்.

தொகுதி உடன்பாடு குறித்து காங்கிரஸ் கட்சியுடனான முதல் சுற்றுப் பேச்சு நிறைவு பெற்றுள்ளது. மற்ற தோழமைக் கட்சிகளுடனும் ஆலோசனை நடைபெறுகிறது. தோழமை உணா்வை மதித்தும், நாட்டின் நிலைமையை உணா்ந்தும் பேச்சுவாா்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன.

நம்மைத் திசைதிருப்ப அவதூறுகளைப் பரப்புவதில் பாஜக, அதிமுக சளைத்தவையல்ல. எதற்கும் அஞ்சாத இயக்கம்தான் திமுக என்பதைக் களத்தில் ஆற்றும் பணிகள் மூலமாக அவா்களுக்கு புரிய வைப்போம் என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com