மாணவா்களுக்கு காலணிகள்:கல்வித் துறை முக்கிய உத்தரவு

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஷூ உள்பட காலணிகள் வழங்குவது தொடா்பாக அதிகாரிகளுக்கு கல்வித் துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஷூ உள்பட காலணிகள் வழங்குவது தொடா்பாக அதிகாரிகளுக்கு கல்வித் துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் ஆகியோா் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலணிகளும், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு காலேந்திகளும் (ஷு) வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு விநியோகிக்கப்படும் காலணிகள், காலேந்திகள் மாணவா்களின் கால்களுக்கு மிகக் கச்சிதமாக பொருந்தும் வகையில் அளவெடுப்பதற்காக இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் மூலமாக பள்ளி மாணவா்களின் கால் அளவுகள் துல்லியமாக எடுக்கப்பட வேண்டும்.

அந்த விவரங்களின்படி காலணிகள், காலேந்திகள் கொள்முதல் செய்யப்படும். இந்தப் பணிகளை சிறந்த முறையில் முடிப்பதற்கான அறிவுறுத்தல்களை அனைத்து மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலா்கள், பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com