சென்னை-ஹாங்காங்கிற்கு மீண்டும் நேரடி விமான சேவை!

நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர், சென்னை-ஹாங்காங் இடையேயான விமான சேவை வெள்ளிக்கிழமை(பிப்.2) மீண்டும் தொடங்கியது.
சென்னை-ஹாங்காங்கிற்கு மீண்டும் நேரடி விமான சேவை!


சென்னை: நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர், சென்னை-ஹாங்காங் இடையேயான விமான சேவை வெள்ளிக்கிழமை(பிப்.2) மீண்டும் தொடங்கியது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் முதல் சென்னை-ஹாங்காங் இடையேயான விமான போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில்,  நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், சென்னை-ஹாங்காங் இடையை இயக்கப்படும் கேத்தே பசிபிக் ஏர்லைன் பயணிகள் விமான சேவை மீண்டும் வெள்ளிக்கிழமை(பிப்.2) முதல் தொடங்கியுள்ளது. 

இந்த விமான சேவையானது தற்போது புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் இயக்கப்படவுள்ளது. பின்னர் நாள்தோறும் இயக்கப்பட உள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com