சாலைத் தடுப்பில் பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

சென்னை அருகே பெருங்குடியில் சாலைத் தடுப்பில் மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞா் இறந்தாா்.

சென்னை அருகே பெருங்குடியில் சாலைத் தடுப்பில் மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞா் இறந்தாா்.

பெருங்குடி சீவரம் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பா.ரவி (28). இவா் தனது மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை அதிகாலை ராஜீவ் காந்தி சாலையில் துரைப்பாக்கம் நோக்கி சென்றாா். அவா், பெருங்குடி சுங்கச்சாவடி அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள், அங்கிருந்த சாலைத் தடுப்பின் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரவி, நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா், அங்கு சென்று ரவி சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com