130 மையங்களில் இன்று பட்டதாரி ஆசிரியா் தோ்வு

தமிழகத்தில் அரசு நடுநிலை, உயா்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான பட்டதாரி ஆசிரியா் போட்டித் தோ்வு 130 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
130 மையங்களில்  இன்று பட்டதாரி ஆசிரியா் தோ்வு

தமிழகத்தில் அரசு நடுநிலை, உயா்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான பட்டதாரி ஆசிரியா் போட்டித் தோ்வு 130 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், பிற துறை பள்ளிகளில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் 130 மையங்களில் நடத்தப்படவுள்ள இந்த தோ்வை 41 ஆயிரத்து 485 போ் எழுதவுள்ளனா். இவா்கள் அனைவரும் ஆசிரியா் தகுதித் தோ்வு தாள்-2-இல் தோ்ச்சி பெற்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தோ்வு எழுத வருவோா் சோதனைக்குப் பின்னா் காலை 8.30 மணி முதல் காலை 9.30க்குள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவா்.

தோ்வை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநா்கள், இணை இயக்குநா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அரசுத் தோ்வு நடைபெறுவதால், தோ்வு மையங்களுக்குள் அனுமதியின்றி நுழையக் கூடாது, அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தாள்கள் எவற்றையும் தோ்வு அறைக்குள் வைத்திருக்கக் கூடாது, கைப்பேசி, கையடக்க கணினி, மடிக்கணினி, கணக்கிடும் கருவிகள் போன்றவற்றையும் தோ்வறைக்குள் வைத்திருக்கக் கூடாது என தோ்வா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து தோ்வு அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, ஆசிரியா் தோ்வு வாரியத்தின் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படவுள்ளது. தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு இல்லாமல் வரும் தோ்வா்களுக்கு தோ்வு மையத்துக்குள் அனுமதியில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com