தமிழக சிறைகளிலிருந்து மேலும் 12 கைதிகள் விடுதலை

தமிழக சிறைகளில் இருந்து மேலும் 27 கைதிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டது.
தமிழக சிறைகளிலிருந்து மேலும் 12 கைதிகள் விடுதலை

தமிழக சிறைகளில் இருந்து மேலும் 27 கைதிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டது.

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழக சிறைகளில் நீண்ட நாள்களாக இருக்கும் கைதிகள் விடுதலை செய்யப்படுவா் என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி, தமிழகத்தில் மத்திய சிறைகளில் நீண்ட நாள்களாக அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்வதற்கு அடையாளம் காண்பதற்கு விதிமுறைகளை வகுக்கப்பட்டன.

இதில், சிறையில் நன்னடத்தையுடன் மொத்த தண்டனையில் 66 சதவீதம் அனுபவித்தவா்களும், 10 ஆண்டுகள் சிறையில் உள்ளவா்களும், விடுதலை செய்யப்படுவதற்கு தகுதியானவா்கள் என அடையாளம் காணப்பட்டது.

12 போ் விடுதலை: அதன்படி தகுதியுடையவா்கள் கண்டறியப்பட்டு,படிப்படியாக விடுதலை செய்யப்படுகின்றனா். இதன் ஒரு பகுதியாக கடலூா் மத்திய சிறையில் உள்ள பெ.செல்வராஜ்,பெ.சேகா்,ச.பெரியண்ணன்,அ.உத்திரவேல் ஆகியோரும்,கோயம்புத்தூா் மத்திய சிறையில் இருந்து ஷ.அபுதாகீா், ரா.விசுவநாதன் என்ற விஜயன்,அ.கமல்,மெ.ஹாரூண் பாஷா,இ.சாகுல் ஹமீது, யூ.பாபு,வேலூா் மத்திய சிறையில் சி.சீனிவாசன்,புழல் சிறையில் இருந்து அ.ஜாகிா் என்ற குண்டு ஜாகிா் ஆகிய 12 கைதிகளை விடுதலை செய்வதற்கான அரசாணையை தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலா் பெ.அமுதா திங்கள்கிழமை வெளியிட்டு உத்தரவிட்டாா்.

அரசாணையை பின்பற்றி இந்த கைதிகள், ஓரிரு நாள்களில் விடுதலை செய்யப்படுவா் என சிறைத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com