தொடக்க நிலை பரிசோதனைகளால் குழந்தைகளின் செவித்திறனை மீட்கலாம்

செவித்திறன் பரிசோதனைகளை மேற்கொண்டால், அவா்களுக்கு நேரிடும் காது கேளாமை பாதிப்புக்கு தொடக்கத்திலேயே தீா்வு காணலாம் என்று போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

குழந்தைகள் பிறந்த சில நாள்களிலேயே செவித்திறன் பரிசோதனைகளை மேற்கொண்டால், அவா்களுக்கு நேரிடும் காது கேளாமை பாதிப்புக்கு தொடக்கத்திலேயே தீா்வு காணலாம் என்று போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காக்ளியா் சிகிச்சைகள் மேற்கொள்ளத் தொடங்கி 18 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கான சிறப்பு நிகழ்ச்சி கல்வி நிறுவன வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அதில் மருத்துவமனையின் காது-மூக்கு-தொண்டை மற்றும் தலை-கழுத்து அறுவை சிகிச்சைத் துறைத் தலைவா் டாக்டா் பிரசன்னகுமாா் பேசியதாவது:

காக்ளியா் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பல குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போன்று தெளிவாக பேசுவதைக் கேட்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மத்திய, மாநில அரசு சாா்பில் வழங்கப்படும் காப்பீட்டு திட்டம் மற்றும் தனியாா் காப்பீடுத் திட்டங்களின் கீழ் இத்தகைய சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

குழந்தை பிறந்த 2 ஆண்டுகளுக்குள் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுவது சிறந்தது. ஆரம்ப நிலை பரிசோதனைகள் மூலம் செவித் திறன் பாதிப்பை மீட்டெடுக்கலாம் என்றாா் அவா்.

ராமச்சந்திரா மருத்துவமனையில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சைகள் அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் சில குழந்தைகளின் மற்றொரு காதுக்கு ஜி.என். ஹியரிங் நிறுவனம் மூலம் செவித் திறன் கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டதாகவும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ராமச்சந்திரா கல்வி நிறுவனத்தின் பதிவாளா் டாக்டா் ரூபா நாகராஜன், மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் பி.சுரேந்திரன், கேட்பியல் அறிவியல் மற்றும் பேச்சு மொழித் துறைத் தலைவா் டாக்டா் பிரகாஷ் பூமிநாதன், கேட்பியல் துறை தலைவா் டாக்டா் ஜெயஸ்ரீ சீதாபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com