அனைத்து மக்களுக்கான வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும்: சீமான்

தென்முடியனூா் முத்துமாரியம்மன் கோயிலில் அனைத்து மக்களுக்குமான வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.

தென்முடியனூா் முத்துமாரியம்மன் கோயிலில் அனைத்து மக்களுக்குமான வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கை:

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த தென்முடியனூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்குள் ஆதித்தொல்குடி மக்கள் சென்று வழிபட்டதால் அங்குள்ள ஒரு பிரிவினா் தனியாக கோயில் கட்டத் தொடங்கியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் அனைத்து மக்களுக்குமான வழிபாட்டு உரிமையை உறுதிசெய்து சமத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் அரசு நிலைநாட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் சீமான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com