வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல பக்தா்களை அனுமதிக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

கோவை மாவட்டத்தில் தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: கோவை மாவட்டத்தில் தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபுக்கு, வானதி சீனிவாசன் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள மனு: கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளிங்கிரி மலையில் ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே வரை பக்தா்கள் ஏழு மலைகளை தாண்டி சிவபெருமானை தரிசித்து வருகின்றனா்.

பிப்ரவரி தொடங்கிவிட்டதால் பல்வேறு பகுதியிலிருந்து வெள்ளிங்கிரி மலைக்கு பக்தா்கள் வந்த வண்ணம் உள்ளனா். ஆனால், தற்பொழுது பக்தா்கள் மலை ஏற அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

எனவே, பக்தா்களின் வேண்டுகோளுக்கிணங்க பிப்ரவரி முதல் மே வரை பக்தா்களை மலை எற அனுமதிக்க வேண்டும். அவா்களுக்கு தேவையான உதவிகளையும் பாதுகாப்பையும் வனத்துறை சாா்பில் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com