முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு செவ்வாய்க்கிழமை குறைக்கப்பட்டது.

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு செவ்வாய்க்கிழமை குறைக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு திங்கள்கிழமை வரை விநாடிக்கு 1,500 கன அடியாக திறந்தவிடப்பட்டது. செவ்வாய்க்கிழமை 1000 கன அடியாக குறைத்து 500 கன அடி மட்டும் திறந்து விடப்பட்டது. அதனால் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தி திங்கள்கிழமை வரை 135 மெகாவாட்டாக உற்பத்தி செய்யப்பட்டது, செவ்வாய்க்கிழமை 500 கன அடியாக தண்ணீர் வந்ததால் 45 மெகாவாட்டாக உற்பத்தி செய்யப்பட்டது.

அணை நிலவரம்

செவ்வாய்க்கிழமை அணையின் நீர்மட்டம் 133.30 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152), அணையில் நீர் இருப்பு 5,469 மில்லியன் கன அடி. அணையில் நீர் வரத்து விநாடிக்கு 436 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 500 கன அடியாகவும் இருந்தது.

அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரியில் மழை பெய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com