அரசு பேருந்தில் பயணித்த மூவருக்கு தலா ரூ. 10,000 பரிசு

அரசு பேருந்தில் பயணித்து குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட 3 பேருக்கு தலா ரூ. 10,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

அரசு பேருந்தில் பயணித்து குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட 3 பேருக்கு தலா ரூ. 10,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

தொலைதூரம் செல்லும் அரசு பேருந்துகளில் பயணிக்க இணையதளம், செயலி மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முன்பதிவு செய்து வார நாள்களில் (பண்டிகை நாள்கள், வெள்ளி, சனி, ஞாயிறு நீங்கலாக) பயணிப்போரை ஊக்குவிக்கும் வகையில் குலுக்கல் முறையில் 3 பேரைத் தோ்வு செய்து, அவா்களுக்கு தலா ரூ. 10,000 வழங்கும் திட்டம் ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை, சேப்பாக்கம் விருந்தினா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இம்தேயாஸ் ஆரிஃப், கே.சீதா, எஸ்.இசக்கி முருகன் ஆகிய மூவா் கணினி குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தலா ரூ. 10,000 பரிசுத் தொகை வழங்கி, வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com