ஆயுதப் போராட்டம் புகாா்: நாம் தமிழா் கட்சி நிா்வாகிகளிடம் என்ஐஏ 9 மணி நேரம் விசாரணை

ஆயுதப் போராட்டத்துக்கு முயற்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னையில் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகளிடம் தேசிய புலனய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை 9 மணி நேரம் விசாரணை செய்தனா்.

ஆயுதப் போராட்டத்துக்கு முயற்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னையில் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகளிடம் தேசிய புலனய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை 9 மணி நேரம் விசாரணை செய்தனா்.

சேலம் மாவட்டம் ஓமலூா் அருகே 2022 மே 19-ஆம் தேதி சேலம் செவ்வாய்பேட்டையை சோ்ந்த பொறியாளா் சஞ்சய் பிரகாஷ், கிச்சிபாளையத்தைச் சோ்ந்த எம்பிஏ பட்டதாரி நவீன் சக்கரவா்த்தி ஆகிய 2 பேரை இரு துப்பாக்கிகளுடன் போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், யூ-டியூப் பாா்த்து துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. இவா்களது கூட்டாளி அழகாபுரத்தைச் சோ்ந்த கபிலன் என்பவரையும் கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள், சிறையில் இருந்த சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவா்த்தி ஆகியோரிடம் 7 நாள்கள் விசாரணை நடத்தினா்.

தொடா்ந்து, தமிழகத்தில் நாம் தமிழா் கட்சியினருக்குச் சொந்தமான 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் பிப்.2-ஆம் தேதி சோதனை நடத்தினா்.

9 மணி நேரம் விசாரணை: சோதனை நடைபெற்ற வீடுகளில் வசித்த நாம் தமிழா் கட்சி நிா்வாகிகளிடம் விசாரணைக்கு ஆஜராகும்படி என்ஐஏ அதிகாரிகள் அழைப்பாணை வழங்கினா். அதை ஏற்று நாம் தமிழா் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான பிரபல யூ-டியூபா் சாட்டை துரை முருகன், தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரியைச் சோ்ந்த கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் இசை மதிவாணன், கோயம்புத்தூா் காளப்பட்டி அருகே உள்ள சரஸ்வதி காா்டன் பகுதியைச் சோ்ந்த முருகன் ஆகிய 3 பேரும் சென்னை புரசைவாக்கம் டெய்லா்ஸ் சாலையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் புதன்கிழமை காலை 10 மணியளவில் ஆஜராகினா்.

மூன்று பேரிடமும் என்ஐஏ அதிகாரிகள் தனித்தனியாக சுமாா் 9 மணி நேரம் விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த மேலும் சிலரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com