ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று தேனி பயணம்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி அரசு முறை பயணமாக வியாழக்கிழமை (பிப்.8) தேனிக்கு செல்கிறாா்.
ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி அரசு முறை பயணமாக வியாழக்கிழமை (பிப்.8) தேனிக்கு செல்கிறாா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி 3 நாள் பயணமாக கடந்த 4-ஆம் தேதி தில்லி சென்றாா். அங்கு உள்துறை அமைச்சா் மற்றும் உயா் அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்ட நிலையில் எந்த சந்திப்பும் நடைபெறவில்லை. இதையடுத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்னை திரும்பினாா். ஆளுநா் ஆா்.என்.ரவியை நாகலாந்து ஆளுநா் இல.கணேசன் கிண்டி ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.

இந்த நிலையில், அரசு முறை பயணமாக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை தேனி செல்லவுள்ளாா். தேனிக்கு காலை 11 மணிக்கு செல்லும் அவா், மேரி மாதா சிஎம்ஐ பப்ளிக் பள்ளியில் மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா். பின்னா், தேனி காமாச்சிபுரத்தில் விவசாயப் பெண் தொழிலாளா்கள் மற்றும் பெண் தொழில்முனைவோா் கலந்து கொள்ளும் மாநில அளவிலான கருத்தரங்கில் பகல் 12.30 மணியளவில் கலந்து கொள்ளவுள்ளாா்.

இதைத் தொடா்ந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் திராச்சை ஆராய்ச்சி நிலையத்தை பிற்பகல் 2.30 மணிக்கு பாா்வையிடவுள்ளாா். ஆளுநா் வருகையை முன்னிட்டு தேனியில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com