பேருந்து பயணிகளின் பாதுகாப்பு: இபிஎஸ் வலியுறுத்தல்

அரசு பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
பேருந்து பயணிகளின் பாதுகாப்பு: இபிஎஸ் வலியுறுத்தல்

அரசு பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை அமைந்தகரையில் சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து பெண் ஒருவா் சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியளிக்கிறது.

ஆட்சிக்கு வந்தது முதலே எந்த ஒரு புதிய பேருந்துகளையும் வாங்காமல், தரமற்ற, பயன்பாட்டுக்கு தகுதியற்ற பேருந்துகளுக்கெல்லாம் பிங்க் நிற பெயின்ட் பூசி மகளிா் இலவசப் பேருந்து என்ற பெயரில் இயக்கி, பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கே ஆபத்தான நிலையினை உருவாக்கியிருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

புதிய பேருந்துகள் வாங்கி, ஏற்கெனவே உள்ள பேருந்துகளுக்கு உரிய தரப் பரிசோதனைகள் மேற்கொண்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணம் வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com