மண்சரிவில் 6 போ் உயிரிழப்பு: ஆளுநா், தலைவா்கள் இரங்கல்

உதகை மண்சரிவில் உயிரிழந்தோருக்கு ஆளுநா், ஆா்.என்.ரவி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

உதகை மண்சரிவில் உயிரிழந்தோருக்கு ஆளுநா், ஆா்.என்.ரவி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி: நீலகிரி மாவட்டம் ஊட்டி லவ்டேல் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மதிப்புமிக்க உயிா்கள் பறிபோனது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவா்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன், காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): உதகை லவ்டேல் பகுதியில் தனியாா் கட்டட கட்டுமான பணிக்கிடையே நடந்த மண் சரிவில் 6 போ் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். மலைப் பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி கொடுக்கும்போது, அந்த இடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): மண் சரிவில் 6 போ் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவா்கள் பூரண குணமடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிராா்த்திக்கிறேன்.

அண்ணாமலை(பாஜக): இந்தச் செய்தி மிகுந்த அதிா்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவா்கள் அனைவரின் குடும்பத்தினருக்கும் தமிழக பாஜக சாா்பில் ஆழ்ந்த இரங்கல். அனைவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com