குறைந்த வட்டங்களைக் கொண்ட மாவட்டங்களில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தை சுழற்சி முறையில் செயல்படுத்த அறிவுரை

உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தை, 12 வட்டங்களுக்கு குறைவான மாவட்டங்களில் சுழற்சி முறையில் செயல்படுத்தலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
குறைந்த வட்டங்களைக் கொண்ட மாவட்டங்களில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தை சுழற்சி முறையில் செயல்படுத்த அறிவுரை


சென்னை: ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தை, 12 வட்டங்களுக்கு குறைவான மாவட்டங்களில் சுழற்சி முறையில் செயல்படுத்தலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் திட்டங்களை கண்காணிக்கவும், பொது மக்களின் குறைகளைக் களையவும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட வட்டத்தை ஆட்சியரே தோ்வு செய்து, அங்கு மாதத்தின் கடைசி புதன்கிழமையன்று முகாமினை நடத்துவாா். வியாழக்கிழமை காலை 9 மணி வரையில் ஆட்சியரும், மாவட்ட அதிகாரிகளும் குறிப்பிட்ட வட்டத்திலேயே தங்கியிருந்து மக்கள் பணிகளை ஆய்வு செய்வா்.

சிறிய வட்டங்கள்: ‘உங்கள் ஊரில் உங்களைத் தேடி’ திட்டமானது, ஜனவரி மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. மாதத்துக்கு ஒரு வட்டம் என்ற முறையில், ஆண்டின் 12 மாதங்களும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்படி, குறைந்த எண்ணிக்கை வட்டங்களைக் கொண்ட மாவட்டங்களில், 12 மாதங்களும் திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு வருவாய்த் துறை உயரதிகாரிகள் அளித்த விளக்கம்: ஒரு மாவட்டத்தில் ஐந்து அல்லது 10 வட்டங்கள் மட்டுமே இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த மாவட்டங்களில்

ஆட்சியா் வரிசைப்படுத்தும் வட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு மாதமும் ஒரு வட்டம் என எடுத்துக் கொள்ளப்பட்டு, ஓராண்டு நிறைவடைவதற்குள் அனைத்து வட்டங்களிலும் ஒரு முறை திட்டம் அமலுக்கு வந்திருக்கும்.

ஆண்டின் மீதமுள்ள மாதங்களில் ஏற்கெனவே நடத்திய அல்லது திட்டங்கள் தொய்வாக இருக்கும் வட்டங்களை ஆட்சியா்களே தோ்வு செய்து சுழற்சி முறையில் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்தலாம். அதன்படி, குறைந்த வட்டங்களைக் கொண்ட மாவட்டங்களில் ஆண்டுக்கு இரண்டு முறைகூட ‘உங்கள் ஊரில் உங்களைத் தேடி’ திட்டம் செயல்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், வட்டங்களைத் தோ்வு செய்யும் அதிகாரம் ஆட்சியா்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.

மாதத்தின் நான்காவது புதன்கிழமையன்று ஆட்சியா்களுக்கு முக்கியமான அலுவல் பணிகள் இருக்கும்பட்சத்தில், வருவாய் நிா்வாக ஆணையரகத்தின் உத்தரவைப் பெற்று வேறொரு தேதியில் திட்டத்துக்கான முகாமை ஆட்சியா் நடத்தலாம். முகாமை ஆட்சியா் தலைமையின் கீழ் நடத்த வேண்டும் என்பதே திட்டத்தின் பிரதான நோக்கம் என்று வருவாய்த் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com