நிரந்தர சிறுபான்மை தகுதிச்சான்று: மமக வரவேற்பு

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர தகுதிச் சான்றிதழ் வழங்க ஆணையிட்டுள்ளதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவா் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளாா்.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர தகுதிச் சான்றிதழ் வழங்க ஆணையிட்டுள்ளதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவா் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சிறுபான்மை தகுதிச் சான்று வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறுபான்மை முஸ்லிம்களுக்கான அடக்கத்தலம் (கப்ருஸ்தான்) மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை மக்களுக்கான கல்லறைத் தோட்டங்கள் இல்லாத 22 மாவட்டங்களில் அடக்கத்தலங்கள் மற்றும் கல்லறைத் தோட்டங்கள் அமைத்துத் தர மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 ஆணைகளைப் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு பாராட்டுகள் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com