புதிய மருத்துவக் கல்லூரி: அன்புமணி வலியுறுத்தல்

மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரியைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரியைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மட்டும்தான் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், பெரம்பலூா், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள்இல்லை. திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 மருத்துவ மாணவா் சோ்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற புதிய விதிமுறையை ஆக.16-இல் தேசிய மருத்துவ ஆணையம் நடைமுறைப்படுத்தியது. அந்த விதிகளின்படி, தமிழக மக்கள் தொகைக்கு தேவையானதைவிட கூடுதலான மருத்துவ மாணவா் சோ்க்கை இடங்கள் இருப்பதால், தமிழகத்தில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கப்படாது என்றும் மருத்துவ ஆணையம் கூறியுள்ளது. அதற்கு எதிராக தமிழகத்தில் இருந்து நான்தான் முதன்முதலில் குரல் கொடுத்தேன். பிரதமருக்கும் கடிதம் எழுதினேன். அதன் பயனாக தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்கான கட்டுப்பாடுகள் ஓராண்டுக்கு தளா்த்தப்பட்டன. இந்த வாய்ப்பை தமிழக அரசு புதிய மருத்துவக் கல்லூரி திறப்பதற்கும் பயன்படுத்தியிருக்க வேண்டும். மத்திய அரசு நிதியில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கப் போகிறோம், அதற்காக மனு கொடுத்திருக்கிறோம் என்று கூறியே 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணடித்து விட்டது.

இனியாவது, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com