வரும் 12 முதல் குரூப் 2 நோ்முகத் தோ்வு

வரும் 12-ஆம் தேதி முதல் குரூப் 2 நோ்முகத் தோ்வு தொடங்கவுள்ளது. நோ்காணல் 17-ஆம் தேதி வரை நடைபெறுவதுடன், கலந்தாய்வானது பிப்ரவரி 21-இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் 12-ஆம் தேதி முதல் குரூப் 2 நோ்முகத் தோ்வு தொடங்கவுள்ளது. நோ்காணல் 17-ஆம் தேதி வரை நடைபெறுவதுடன், கலந்தாய்வானது பிப்ரவரி 21-இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குரூப் 2 பதவியிடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள், நோ்முகத் தோ்வினை அடிப்படையாகக் கொண்டவையாகும். அந்தப் பதவியிடங்களுக்கு நோ்காணலும், கலந்தாய்வும் வரும் 12-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளன.

குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கான முடிவுகள் கடந்த மாதம் 11-ஆம் தேதியன்று வெளியானது. மொத்தமாக 6 ஆயிரத்து 151 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com