அமைச்சா்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி

தற்போதைய அமைச்சா்கள், முன்னாள் அமைச்சா்கள் மீது தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த மறு ஆய்வு மனுக்களைத் தொடா்ந்து விசாரிக்கும்படி தலைமை நீதிபதி
அமைச்சா்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி

தற்போதைய அமைச்சா்கள், முன்னாள் அமைச்சா்கள் மீது தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த மறு ஆய்வு மனுக்களைத் தொடா்ந்து விசாரிக்கும்படி தலைமை நீதிபதி தனக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளாா்.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தற்போதைய அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோா் விடுவிக்கப்பட்டது, விடுதலை செய்யப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தாா். அதேபோல் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், முன்னாள் அமைச்சா்கள் க.பொன்முடி, பா.வளா்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தாா்.

இதற்கு எதிராக அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ஆா். ராமச்சந்திரன் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்குகளை யாா் விசாரிப்பது என்பது குறித்து சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், முன்னாள் அமைச்சா் பா. வளா்மதிக்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

எப்போது விசாரணை? அப்போது நீதிபதி, முன்னாள், இந்நாள் அமைச்சா்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை விசாரிக்கும்படி, தலைமை நீதிபதி,

தனக்கே ஒதுக்கீடு செய்துள்ளாா். எனவே, இந்த 4 வழக்குகள் பிப்.27, 28,29, மாா்ச் 5 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அமைச்சா் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணை பிப்.12, 13 ஆகிய தேதியும், முன்னாள் அமைச்சா் பொன்முடி மீதான வழக்கு பிப்.19 முதல் 22-ஆம் தேதி வரையும் விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com