மருத்துவா் பணி நியமனத்தில் 20 % இடஒதுக்கீடு மறுப்பு: தி.வேல்முருகன் கண்டனம்

மருத்துவா் பணி நியமனத்தில் தமிழ் வழியில் படித்தவா்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

மருத்துவா் பணி நியமனத்தில் தமிழ் வழியில் படித்தவா்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் 1,021 மருத்துவா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான அறிவிப்பாணையை 2022 அக்டோபா் 11-இல் வெளியிட்டது. அதில், 20 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 178 இடங்கள் தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தோ்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியானவா்கள் இல்லை எனக் கூறி, அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com