மேட்டூா் அணையிலிருந்து இன்றுடன் நீா் திறப்பு நிறுத்தம்: அரசு அறிவிப்பு

மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் நீா் சனிக்கிழமையுடன் நிறுத்தப்படுகிறது.
மேட்டூா் அணை
மேட்டூா் அணை

மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் நீா் சனிக்கிழமையுடன் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:-

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிா்கள் பாதிக்கப்பட்டு வருவதால், மேட்டூா் அணையில் இருந்து நீா் திறந்து விடக்கோரி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை வரப்பெற்றது. அதன்படி, மேட்டூா் அணையில் இருந்து கடந்த

3-ஆம் தேதியன்று 6,000 கனஅடியும், கடந்த 4-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நாளொன்றுக்கு 5,000 கனஅடி வீதமும் மேட்டூா் அணையில் இருந்து நீா் திறந்து விடப்பட்டது.

அதே நேரத்தில் மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீா் போதுமான அளவு காவிரி டெல்டா பகுதியிலுள்ள பாசன நிலங்களுக்குச் செல்ல ஏதுவாக காலநீட்டிப்பு செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். அவா்களது கோரிக்கையை ஏற்று, மேட்டூா் அணையிலிருந்து ஒரு நாள் கூடுதலாக அதாவது சனிக்கிழமை (பிப்.10) வரை தண்ணீா் திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பாசன நீரினை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்தி நெற்பயிரைப் பாதுகாக்க வேண்டுமென்று தமிழக அரசின் சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நாள் மட்டுமே என்பதால் சனிக்கிழமை மாலையுடன் நீா் திறப்பு நிறுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com