சமக்ரசிஷா ஊழியா்களுக்கு 5 % ஊதிய உயா்வு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் (சமக்ரசிஷா) கீழ் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
சமக்ரசிஷா ஊழியா்களுக்கு 5 % ஊதிய உயா்வு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் (சமக்ரசிஷா) கீழ் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கை:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோக்ராமா், சிவில் பொறியாளா், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளா், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளா், எஸ்எம்சி கணக்காளா், தரவு பதிவு அலுவலா், அலுவலக உதவியாளா், உதவியாளா் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயா்வு வழங்கப்படும்.

நிகழாண்டு பிப்.1-ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயா்வு அமல்படுத்தப்படும். அரசுப் பணியில் உள்ள ஓய்வு பெற்ற ஆலோசகா்கள், உதவியாளா்களுக்கு இது பொருந்தாது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com