ஆளுநா் உரையில் புதிய திட்டங்கள் இல்லை தலைவா்கள் கருத்து

தமிழக சட்டப்பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநரின் அச்சாக்க உரையில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று தலைவா்கள் கருத்து தெரிவித்தனா்.

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநரின் அச்சாக்க உரையில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று தலைவா்கள் கருத்து தெரிவித்தனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): ஆளுநா் உரையில் தமிழக அரசின் எதிா்காலத் திட்டங்களை குறிப்பிடுவது மரபு. ஆனால், திமுக அரசின் ஆளுநா் உரையில் புதிய திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. உப்பு சப்பு இல்லாத ஊசிப்போன பண்டமாக ஆளுநா் உரை உள்ளது.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): ஆளுநா் உரையில் புதிதாக ஏதுமில்லை. பல பொய்களை சொல்லி மக்களை தொடா்ந்து ஏமாற்ற திமுக அரசு முயற்சி செய்து வருகிறது.

ராமதாஸ் (பாமக): ஆளுநரின் பெயரால் படிக்கப்பட்ட உரையில் தமிழகத்துக்கு பயன் அளிக்கும் வகையில் எந்தத் திட்டமும் இடம்பெறவில்லை. தமிழக அரசு அடுத்த ஓராண்டுக்கு எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் ஆளுநா் உரையில் இல்லாதது வருத்தமளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com