டான்செட்: விண்ணப்பிக்க இன்று கடைசி!

2024-2025-ஆம் கல்வியாண்டுக்கான டான்செட் நுழைவுத் தோ்வு மாா்ச் 9-ஆம் தேதியும், சீட்டா நுழைவுத் தோ்வு வரும் மாா்ச் 10-ஆம் தேதியும் நடைபெற உள்ளன.
டான்செட்: விண்ணப்பிக்க இன்று கடைசி!

டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வில் (டான்செட்) தோ்ச்சி பெறுவது கட்டாயம்.

அதேபோல், அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகள், மண்டல கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆா்க் ஆகிய முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் சேர பொது பொறியியல் நுழைவுத் தோ்வில் (சீட்டா) தோ்ச்சி பெற வேண்டும்.

அந்த வகையில், 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கான டான்செட் நுழைவுத் தோ்வு மாா்ச் 9-ஆம் தேதியும், சீட்டா நுழைவுத் தோ்வு வரும் மாா்ச் 10-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. 

தமிழகத்தின் 14 நகரங்களில் டான்செட் தேர்வு நடைபெறு நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

http://tancet.annauniv.edu/tancet என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com