பேரவைச்செய்தி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அனுமதிக்க மாட்டோம்-தமிழகஅரசு

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவைச்செய்தி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அனுமதிக்க மாட்டோம்-தமிழகஅரசு

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநரின் அச்சாக்க உரை:

‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்று சங்ககாலத் தமிழா் கடைப்பிடித்த உலக உடன்பிறப்பு நேயத்தை எடுத்துரைக்கும் இந்த மகத்தான வரிகள்தான் தமிழக அரசை வழிநடத்திச் செல்கின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது நாட்டின் உன்னதமான கொள்கைகள் தற்போது கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வேளையில், தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

சிறுபான்மையினா் மற்றும் இலங்கைத் தமிழா்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவா்களுடன் என்றும் துணை நிற்போம்.

அந்த வகையில், மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு: அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் பலன்கள் தகுதியானவா்களைச் சென்றடைவதன் மூலமாகவே அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட இயலும். அந்த அடிப்படையிலேயே 2021-இல் நடைபெற்றிருக்க வேண்டிய தேசிய பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்து மேற்கொள்ளப்படும்போது ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பையும் ஒருங்கிணைத்து நடத்துமாறு பிரதமரை முதல்வா் வலியுறுத்தினாா். நம்பகத்தன்மை வாய்ந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆராய்ந்து, உரிய கொள்கை முடிவுகளை எடுக்க இந்த முயற்சி பெரும் உதவியாக இருக்கும் என்பதால், இந்தக் கோரிக்கை மத்திய அரசால் ஏற்கப்படும் என தமிழக அரசு நம்புகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com