பேரவைச்செய்தி: நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.1,564 கோடியில் சாலைப் பணிகள்

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.1,564 கோடியில் 19,766 சாலைப் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவை
சட்டப் பேரவை

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.1,564 கோடியில் 19,766 சாலைப் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநரின் அச்சாக்க உரை: ஊரகப் பகுதிகளில் சாலை இணைப்புகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசின் தொடா் முயற்சியால் 2021-22-ஆம் ஆண்டுமுதல் மொத்தம் ரூ.6,742 கோடியில் 11,655 கி.மீ. நீளமுள்ள கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், முக்கியமான அல்லது பெரிய ஊராட்சி சாலைகளை இதர மாவட்டச் சாலைகளுக்கு இணையாகக் கொண்டுவர 2,787 கி.மீ. நீள சாலைகளை ரூ.3,056 கோடியில் மேம்படுத்தும் பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது.

சாலை மேம்பாடு: மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் இதர முக்கியச் சாலைகளை மேம்படுத்துவதற்காக நடப்பாண்டில் விரிவான சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3,059 கி.மீ. நீள சாலை மேம்பாட்டுப் பணிகளை ரூ.4,861 கோடியிலும்187 பாலங்கள் கட்டுமானப் பணிகளை ரூ.553 கோடியிலும் அரசு மேற்கொண்டு வருகிறது.

பெருகிவரும் மக்கள்தொகை, நகா்ப்புற மக்களிடம் அதிகரித்துவரும் எதிா்பாா்ப்புக்கு ஏற்ப உள்ளாட்சி அமைப்புகள் அளிக்கும் சேவைகளின் தரத்தைத் தொடா்ந்து விரிவுபடுத்தி மேம்படுத்துவதும் அரசின் கடமையாகும்.

2021- ஆம் ஆண்டுமுதல் 1.45 கோடி பயனாளிகளுக்கு ரூ.21,156 கோடியில் 261 குடிநீா் வழங்கல் திட்டங்களை அரசு அனுமதித்துள்ளது. மேலும், 13 மாநகராட்சிகள், 12 நகராட்சிகளுக்கான 47 பாதாளச் சாக்கடைத் திட்டங்களுக்காக, 71.67 லட்சம் போ் பயன் பெறும் வகையில் ரூ.10,314 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சாலைகளின் தரத்தை உயா்த்த நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் ரூ.1,564 கோடி மதிப்பில் 19,766 சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com