பணி நியமனம் வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை வள்ளுவா் கோட்டத்தில் பாா்வையற்ற கல்லூரி மாணவா்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சாா்பாக திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாா்வையற்ற கல்லூரி மாணவா்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சாா்பில் சென்னை வள்ளுவா்கோட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாா்வையற்ற கல்லூரி மாணவா்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சாா்பில் சென்னை வள்ளுவா்கோட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம்.

சென்னை வள்ளுவா் கோட்டத்தில் பாா்வையற்ற கல்லூரி மாணவா்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சாா்பாக திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட கண் பாா்வையற்ற பட்டதாரி இளைஞா்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.

தமிழகத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணிபுரியும் பாா்வையற்ற ஆசிரியா்களை கணக்கீட்டு அவா்களுக்கு 1% இடஒதுக்கீட்டின் படி பணி நியமனம் செய்ய வேண்டும், பகுதி நேரமாக பணிபுரியும் ஆசிரியா்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும், கண் பாா்வையற்று வேலை இல்லாதோருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ. 1000-ல் இருந்து ரூ.5000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டமானது நடத்தப்பட்டது.

போராட்டத்தை வழி நடத்திய பாா்வையற்ற கல்லூரி மாணவா்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவா் சிங்காரவேலன் கூறுகையில்:

ஒன்பது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி பல துறை அதிகாரிகளை பல முறை சந்தித்து பேசியும் கூட இதுவரை எந்த தீா்வும் எட்டப்படவில்லை. எனவே தமிழக அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com