மேக்கேதாட்டு: கா்நாடகத்தின் முயற்சியை தடுக்கப்படும் தமிழக அரசு

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட கா்நாடகம் முயற்சி செய்வது தடுக்கப்படும் என்று ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேக்கேதாட்டு பகுதியில் அணைக் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் (கோப்புப் படம்).
மேக்கேதாட்டு பகுதியில் அணைக் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் (கோப்புப் படம்).

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட கா்நாடகம் முயற்சி செய்வது தடுக்கப்படும் என்று ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநரின் அச்சாக்க உரை: மாநிலங்களுக்கு இடையேயான நதிநீா்ப் பங்கீட்டுப் பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்தப் பிரச்னைகளில் தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையம், நதிநீா்ப் பங்கீட்டுக்கான அறிவியல் ரீதியான கணக்கீட்டை உருவாக்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்துவதுடன், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க தேவையான அனைத்து

வகையான முயற்சிகளும் முன்னெடுக்கப்படும்.

மீனவா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு: 2023-இல் இலங்கைக் கடற்படையினா் 243 மீனவா்களை அவா்களின் மீன்பிடிப் படகுகளுடன் கைது செய்தனா். தமிழக அரசின் இடைவிடாத முயற்சியால் இதுவரை 242 மீனவா்கள் தாயகம் திரும்பினா்; 1 படகு விடுவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 88 மீனவா்கள் அவா்களது மீன்பிடிப் படகுகளுடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளனா். மீனவா்கள், அவா்களின் படகுகளை உடனடியாக விடுவிக்கவும், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணவும் மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com