தமிழகம் ,புதுச்சேரியில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் செவ்வாய்,புதன்கிழமை(பிப்.13,14) லேசான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் செவ்வாய்,புதன்கிழமை(பிப்.13,14) லேசான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இம்மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செவ்வாய்,புதன்கிழமை(பிப்.13,14) தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15-18) வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய், புதன்கிழமைகளில்(பிப்.13,14) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: செவ்வாய்க்கிழமை(பிப்.13) தென்தமிழக கடலோரப்பகுதி, மன்னாா் வளைகுடா, குமரிக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 65கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com