அமைச்சர் பெரியசாமி மீதான முறைகேடு வழக்கு: இன்று விசாரணை

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(பிப்.13) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அமைச்சர் ஐ. பெரியசாமி (கோப்புப் படம்)
அமைச்சர் ஐ. பெரியசாமி (கோப்புப் படம்)

சென்னை : தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பாதுகாவலராக வேலை செய்த காவல்துறை அதிகாரி கணேசனுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு முறைகேடாக ஒதுக்கியதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2012-ஆம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக தற்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ஐ.பெரியசாமிக்கு எதிராக, கடந்த 2012-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்று(பிப்.12) நடைபெற்ற நிலையில், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வாதங்களுக்காக விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று(பிப்.13) ஒத்திவைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று(பிப்.13) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com