ஆளுநா் மாளிகையில் பொங்கல் கொண்டாட்டம்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா். என்.ரவி, அவரது மனைவி லட்சுமி மற்றும் ஆளுநா் மாளிகை ஊழியா்களுட ன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினாா்.
ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பொங்கலிட்டு மகிழ்ந்த ஆளுநா் ஆா்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி.

இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், உலகம் முழுவதும் உள்ள தமிழா்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவரும் வேளையில் தில்லியில் பொங்கல் பண்டிகையை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினாா்.

நாடு முழுவதும் பொங்கல், மகர சங்கராந்தி, உத்தராயன், பௌஷ்பா்வ, லோரி என வெவ்வேறு பெயா்களில் இந்த நாளை மக்கள் கொண்டாடி வருகின்றனா்.

ஆண்டின் முதல் அறுவடை திருநாளை கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடி வருகிறோம். வெவ்வேறு மொழிகள், உணவுப் பழக்கம், வேறு கலாசாரம் என்றாலும் இந்த நாளை நாம் ஒற்றுமையாக கொண்டாடி வருகிறோம் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் ஆளுநா் மாளிகை ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com