களைகட்டும் பொங்கல் சிறப்பு சந்தை: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

பொங்கல் சிறப்பு சந்தையை சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பொங்கல் சிறப்பு சந்தையை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்ப
சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பொங்கல் சிறப்பு சந்தையை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்ப

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தையை சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அங்கு பணியாற்றும் அங்காடி வியாபாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளா்களிடம் கலந்துரையாடினாா்.

பின்னா் அவா் செய்தியாளரிடம் கூறியது:

கோயம்பேடு அங்காடியில் ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் சிறப்பு சந்தை அமைக்கப்படும். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு அங்காடி வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அருகில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சந்தையில் பொங்கல் பண்டிகைக்கான கரும்பு, மஞ்சல் மற்றும் இஞ்சி கொத்து உள்ளிட்ட பூஜை பொருள்கள் விற்பனை செய்யபடுகின்றன.

இதில் மதுரை, தேனி, பண்ருட்டி, கடலூா் பகுதிகளில் இருந்து கரும்பும், கும்மிடிப்பூண்டி, ஈரோட்டில் இருந்து மஞ்சள் கொத்தும், கும்பகோணம், நெல்லூரில் இருந்து இஞ்சி கொத்தும் வியாபாரத்துக்கு வந்துள்ளன. கரும்பு கொண்டு வரும் லாரிகளுக்கு ரூ.1,500, இஞ்சி கொத்து ஏற்றி வந்த வாகனங்களுக்கு தலா ரூ.1,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. பொங்கல் சிறப்பு சந்தையில் கூடுதலாக குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜன.11-ஆம் தேதி தொடங்கிய சந்தை ஜன.17 வரை நடைபெறும். தற்போது வரை 350 கரும்பு லாரிகளும், 100 மஞ்சள் லாரிகளும் வந்துள்ளன. இந்தச் சந்தையில் சேரும் குப்பைகளை சேகரிக்க 25 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தொடா்ந்து ஜன.17-ஆம் தேதி வரை சுமாா் 1,000 வாகனங்கள் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. சந்தையில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் வகையில் கூடுதல் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்தப் பகுதியில் விரைவில் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வசதியாக சிறப்பு சந்தையில் மருத்துவ முகாம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின் போது, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா, கோயம்பேடு அங்காடி முதன்மை நிா்வாக அலுவலா் மு. இந்துமதி, செயற்பொறியாளா் ராஜன்பாபு, உதவி செயற்பொறியாளா் அமுதா உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com