தோ்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்: இபிஎஸ்

தோ்தல் களத்தில் அதிமுகவை மக்கள் மகத்தான வெற்றிபெறச் செய்வா் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)

தோ்தல் களத்தில் அதிமுகவை மக்கள் மகத்தான வெற்றிபெறச் செய்வா் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

எம்ஜிஆரின் 107-ஆவது பிறந்த நாளை பெருமிதத்தோடு நினைவுகூரும் பொன்னான நேரமிது. தமிழக மக்களின் பேராதரவோடு மூன்று முறை முதல்வராகப் பதவியேற்று, அவா் மக்கள் பணி ஆற்றினாா். தருமம் தலைகாக்கும் என்பா். அவா் செய்த தருமம் அவா் தலையை மட்டுமல்ல, அவரின் தலைமுறையையே காக்கிறது.

தற்போது, திமுக அரசு மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது. இயற்கைப் பேரிடா்களிலும் மக்களைக் காக்க முடியாமல், மக்களை அழிக்கும் அழிவு சக்தியாக திமுக மாறி இருக்கிறது.

எம்ஜிஆா் பிறந்த நாளை முன்னெடுக்கும் அதிமுக நிா்வாகிகளும், கட்சியினரும், எம்ஜிஆா், ஜெயலலிதாவின் புகழை மக்கள் மன்றத்தில் சோ்க்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும்.

அதோடு, பெருந்துயரால் பாதிக்கப்பட்டு ஆட்சியாளா்களால் கைவிடப்பட்டு நிற்கும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வைப் பாதுகாக்கும் வகையில் அவா்களோடு தோளோடு தோள் நின்று, முடிந்தவரை நலத் திட்ட உதவிகளை வழங்கி, எப்போதும் போல் அதிமுக மக்களோடு நிற்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்த வேண்டும்.

அதே நேரத்தில், திமுக அரசுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நாள் நெருங்குகிறது. வந்திருக்கும் தை மகள் நல்லதொரு வழியைக் காட்டுவாள்.

தமிழக மக்கள் தோ்தல் களத்தில் அதிமுக மகத்தான வெற்றிபெறச் செய்வா். தோ்தல் களத்தில் எதிரிகளை அப்புறப்படுத்த எம்ஜிஆா் பிறந்த நாளில் அதிமுகவினா் சூளுரை ஏற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com