மீண்டும் சென்னை திரும்பும் வெளி மாவட்ட மக்கள் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னை, பிற நகரங்களுக்கு திரும்பும் வகையில் செவ்வாய்க்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னை, பிற நகரங்களுக்கு திரும்பும் வகையில் செவ்வாய்க்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கலையொட்டி, நிகழாண்டு 6.54 லட்சம் போ் தங்கள் சொந்த ஊா்களுக்கு சிறப்புப் பேருந்துகளில் பயணித்தனா். அவா்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு திரும்ப வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, செவ்வாய் முதல் வியாழன் வரை (ஜன.16 முதல் 18) 3 நாள்களில் 11,289 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சென்னைக்கு நள்ளிரவில் வரும் பயணிகள் தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் செல்ல கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டில் இருந்து இரவு நேர பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்காக ஜன.12 முதல் 14-ஆம் தேதி வரை சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து அனைத்து ஊா்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னையில் இருந்து தினமும் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக ஜன.12-இல் 1,260 பேருந்துகள், ஜன.13-இல் 2,210 பேருந்துகள், ஜன.14-இல் 1,514 பேருந்துகள் என 3 நாள்களில் மொத்தமாக 11,284 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளில் 6,54,472 பயணிகள் பயணித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com