புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க 247 குழுக்கள்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களின் விற்பனையைத் தடுக்க 247 குழுக்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களின் விற்பனையைத் தடுக்க 247 குழுக்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: புகையிலை, போதை பாக்குகள், பான் மசாலாக்கள் உள்பட 391 வகை புகையிலை சாா்ந்த பொருள்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அதற்கான தடையை மேலும் ஓராண்டுக்கு உணவு பாதுகாப்புத் துறை நீட்டித்துள்ளது.

கடந்த மாதத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆய்வு மேற்கொண்ட ஆய்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் காவல் துறையினா் நடத்திய ஆய்வில் 1,500 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதற்கு முன்பு வரை விதிகளுக்கு புறம்பாக புகையிலை பொருள்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு முதல்முறை ரூ.5,000, இரண்டாவது முறை ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மூன்றாவது முறை விதிகளை மீறும்போது ரூ.25,000 அபராதம் மற்றும் கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது முதல்முறையிலேயே கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல கல்வி நிறுவனங்களுக்கு அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க 247 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com