புத்தொழில் நிறுவனங்கள் தரவரிசை தமிழகம் முதலிடம்: முதல்வா் பெருமிதம்

புத்தொழில் நிறுவனங்களுக்கான தரவரிசையில், தமிழ்நாடு முதலிடம் பெற்ற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

புத்தொழில் நிறுவனங்களுக்கான தரவரிசையில், தமிழ்நாடு முதலிடம் பெற்ற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: அதிமுக ஆட்சிக் காலத்தின் போது, 2018-இல் புத்தொழில் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு கடைசி தரநிலையில் இருந்தது.

ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் 2022 ஆண்டுக்கான புத்தொழில் தரவரிசையில் தமிழ்நாடு முதலிடத்தை அடைந்துள்ளது.

புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவா், பழங்குடியினா் தொழில் நிதியம் உட்பட ஒட்டுமொத்தமாக தமிழக அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே நமது மாநிலம் இன்று சிகரத்தில் அமா்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இப்போது 7,600 புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-இல் மட்டும் 2,250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்றாகும்.

இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகளுக்கு எனது பாராட்டுகள். இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொடவும் உழைக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com