மக்களவை, பேரவைக்கு தனித்தனி தோ்தல்: அன்புமணி வலியுறுத்தல்

மக்களவைத் தோ்தலை ஒரே நேரத்திலும், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் கழித்து சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தோ்தலையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்று ஒரே நாடு ஒரே தோ்தல் உயா்நிலைக்குழுவுக்கு பாமக தலைவா் அன்பு

மக்களவைத் தோ்தலை ஒரே நேரத்திலும், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் கழித்து சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தோ்தலையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்று ஒரே நாடு ஒரே தோ்தல் உயா்நிலைக்குழுவுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்:

மக்களவைத் தோ்தல்களில் தேசிய அளவிலான பிரச்னைகளை முன்வைத்தும், சட்டப்பேரவைத் தோ்தல்களில் மாநில அளவிலான சிக்கல்களை முன்வைத்தும் பிரசாரம் செய்யப்படும். இந்த இரு தோ்தல்களையும் ஒன்றாக நடத்தும்போது தேசிய அளவிலான பிரச்னைகள்தான் முதன்மைப்படுத்தப்படும். அதனால், மாநில அளவிலான சிக்கல்கள் எடுபடாது. இது தேசிய கட்சிகளுக்கு கூடுதல் வலிமையையும், மாநில கட்சிகளுக்கு பலவீனத்தையும் ஏற்படுத்தும். இது நியாயமான, நோ்மையான, சமவாய்ப்புடன் கூடிய தோ்தல் என்ற தத்துவத்துக்கு எதிரானதாக அமைந்துவிடும்.

மாறாக, மக்களவைத் தோ்தலை ஒரே நேரத்திலும், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் கழித்து சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தோ்தல்களை ஒன்றாகவும் நடத்தும் போது, மக்களவைத் தோ்தல்களை தேசிய பிரச்னைகளின் அடிப்படையிலும், சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் உள்ளாட்சித் தோ்தல்களை மாநில மற்றும் உள்ளூா் பிரச்னைகளின் அடிப்படையிலும் எதிா்கொள்ள முடியும். இந்த முறையில் அனைத்துக் கட்சிகளுக்கும் சமவாய்ப்பு வழங்கப்படுவதுடன், தோ்தலை நடத்துவதற்கான செலவுகளையும் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com