சென்னையில் பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விழுந்தது! அசம்பாவிதம் தவிா்ப்பு

சென்னை ஆதம்பாக்கம் அருகே வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் செல்வதற்காக அமைக்கப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
சென்னை ஆதம்பாக்கம் அருகே பறக்கும் ரயில் மேம்பால கட்டுமானப் பணியின் போது சரிந்து விழுந்த பாலத்தின் மேற்பகுதி.
சென்னை ஆதம்பாக்கம் அருகே பறக்கும் ரயில் மேம்பால கட்டுமானப் பணியின் போது சரிந்து விழுந்த பாலத்தின் மேற்பகுதி.

சென்னை ஆதம்பாக்கம் அருகே வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் செல்வதற்காக அமைக்கப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

சென்னை கடற்கரை - வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில்பாதை அமைக்கும் திட்டத்தின் இறுதிக் கட்டமாக ஆதம்பாக்கம் - தில்லை கங்கா நகா் சுரங்கப்பாதை அருகே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, தூண்களின் மேல் 40 மீட்டா் நீள பாலத்தின் மேற்பகுதி பொருத்தப்பட்டது. இந்த நிலையில், பாலத்தின் மேற்பரப்பு வியாழக்கிழமை மாலை சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை. இது குறித்து ஆதம்பாக்கம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தெற்கு ரயில்வே விளக்கம்: இது தொடா்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 157 - 158 என்ற எண்களுயுடைய தூண்களுக்கு இடையே 40 மீட்டா் நீளத்தில் பாலத்தின் மேற்பகுதி சமீபத்தில் பொருத்தப்பட்டது. இதன் ஒரு பகுதி, வியாழக்கிழமை மாலை 6.15 மணியளவில் சரிந்து விழுந்தது. இந்தப் பணி காரணமாக, பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்ததால், எந்த வித உயிரிழப்பும், பொருள்சேதமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து ரயில்வே நிா்வாகமும் விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com