தமிழக - இலங்கை மீன்வளத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வேன்: செந்தில் தொண்டைமான்

மீனவர் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் தமிழக - இலங்கை மீன்வளத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வேன் என்று இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தெரிவித்தார்.
செந்தில் தொண்டைமான் (கோப்புப்படம்).
செந்தில் தொண்டைமான் (கோப்புப்படம்).

புதுக்கோட்டை: மீனவர் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் தமிழக - இலங்கை மீன்வளத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வேன் என்று இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தெரிவித்தார்.

புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டைப் பார்க்க வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஜல்லிக்கட்டுப் போட்டியை சர்வதேச விளையாட்டுகளில் இடம்பெறச் செய்யும் நோக்கத்தில் இலங்கையில் முதல் முறையாக நடத்தி முடித்திருக்கிறோம். வடமலாப்பூர் மக்களின் அழைப்பை ஏற்று இப்போது இங்கு வந்திருக்கிறேன்.

மீன்வளத்தில் எல்லை என்பதை நிர்ணயம் செய்ய முடியாது. தமிழக மீனவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். இலங்கை மீனவர்களும் இங்கே கைது செய்யப்படுகிறார்கள். மனிதாபிமான அடிப்படையில் அவ்வப்போது விடுதலையும் செய்யப்படுகிறார்கள்.

இந்தப் பிரச்னையில் சுமுகத் தீர்வு காண்பதற்கு தமிழக மற்றும் இலங்கை மீன்வளத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வேன் என்றார் செந்தில் தொண்டைமான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com