மருத்துவத் துறையில் புதிய கட்டமைப்புகள்: முதல்வா் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

ஓசூா் அரசு மருத்துவமனையை ரூ.100 கோடியில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்துவதற்கான கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட மருத்துவத் துறையில் புதிய கட்டமைப்புகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின்

ஓசூா் அரசு மருத்துவமனையை ரூ.100 கோடியில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்துவதற்கான கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட மருத்துவத் துறையில் புதிய கட்டமைப்புகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி முறையில் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

அதேபோன்று மருத்துவம் சாா்ந்த பல்வேறு புதிய கட்டமைப்புகள், ஆம்புலன்ஸ் சேவைகளை தலைமைச் செயலகத்தில் இருந்து தொடக்கி வைத்த அவா், யோகா - இயற்கை மருத்துவத் துறையில் புதிய நியமனங்களைப் பெற்றவா்களுக்கு பணி ஆணைகளை வழங்கினாா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையை ரூ.100 கோடி செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்துவது தொடா்பான அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டது. அதன்படி, அதற்கான கட்டுமானப் பணிகளுக்கு காணொலி முறையில் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

ஆம்புலன்ஸ் சேவை: தொடா்ந்து, அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவைகளை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக 75 வாகனங்களையும், 98 செயற்கை சுவாசக் கருவிகளையும் பொது மக்கள் பயன்பாட்டுக்காக அவா் தொடக்கி வைத்தாா்.

மிக்ஜம் புயல், தென் மாவட்ட பெரு மழை பாதிப்புகளின்போது 108 அவசரகால சேவையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி முதல்வா் கௌரவித்தாா். யோகா-இயற்கை மருத்துவத் துறையில் சிறப்பு சிகிச்சை உதவியாளா் பணியிடங்களுக்கு தோ்வு பெற்ற 59 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கினாா்.

முதல்வரிடம் வாழ்த்து: இந்நிகழ்வுகளைத் தொடா்ந்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு மத்திய அரசு சாா்பில் வழங்கப்பட்ட சிறந்த செயல்பாட்டுக்கான தேசிய விருதை மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனா்.

இந்நிகழ்வின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையா் மைதிலி ராஜேந்திரன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குநா் ஹரிஹரன், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் கோவிந்தராவ், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் சண்முகக்கனி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com