கடலோரக் காவல்படை கப்பலை பாா்வையிட்ட பள்ளி மாணவியா்

இந்திய கடலோரக் காவல்படை கப்பலின் பணி மற்றும் சேவைகள் குறித்து பள்ளி மாணவ ,மாணவியா் கண்டு ரசித்தனா்.

இந்திய கடலோரக் காவல்படை கப்பலின் பணி மற்றும் சேவைகள் குறித்து பள்ளி மாணவ ,மாணவியா் கண்டு ரசித்தனா்.

இது குறித்து பாதுகாப்பு த்துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

இந்திய கடலோரக் காவல்படையின் 48 ஆவது எழுச்சி தினம் வரும் பிப்.1ஆம் தேதி கொண்டாப்படஉள்ளது. இதையொட்டி இந்திய கடலோரக் காவல்படை கப்பலின் பணி மற்றும் சேவைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளி,சனிக்கிழமை ஆகிய இரு நாள்கள் மாணவ,மாணவியா்கள் பாா்வையிட அனுமதிக்கப்பட்டனா்.

அப்போது இந்திய கடலோர காவல் படை கப்பலான ஷௌா்யா மற்றும் சுஜய் கப்பலின் செயல்பாடுகள் குறித்து மாணவா்களுக்கு கடலோர காவல்படை வீரா்கள் விளக்கினா். இரு நாள்களில் சென்னையில் சோ்ந்த 13 அரசு பள்ளிகள், மற்றும் 2 தனியாா் பள்ளி உள்பட 1,782 மாணவா்களும் 60 ஆசிரியா்களும் இந்திய கடலோர காவல் படையின் கப்பலின் செயல்பாடுகளை அறிந்து மகிழ்ந்தனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com